Wednesday, July 21, 2010

இல்லாமல் இல்லை

சிற்பி செதுக்காத பொற்சிலை
கவிஞன் பாடாத கவிதை

மேகம் பொழியாத சாரல்
காற்றில் பிறக்காத தென்றல்

என்றும் வாடாத வாசமுல்லை
விளக்கில் பிறக்காத வெளிச்சம்

தேனில் நனையாத இன்சுவை
மண்ணில் விளையாத மாங்கனி

சந்திரனால் தோன்றாத குளிர்ச்சி
வீணையின்றி பிறந்த ராககானம்

பிரம்மன் படைக்காத பேரழகுப்பெட்டகம்
அனைவர் மனம், மொழி, உடலை

ஆட்டிவைக்கும் படைபிலக்கணம்
இத்தனை அடைமொழி ஆபரணங்களும்

அதன் சொந்தக்காரர்களுக்கு மட்டும் புரிந்த ஒன்று .
அதனை அறிந்தவரும், தெரிந்தவரும் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று!

அத்தனையும் மொத்தமாக உத்தமப் பெண்ணுக்குப்பொருந்தும் என்றாலும்
இதற்கும் பொருந்தும் - அது
வாய்மையின் தூய்மை வெளிப்பாடு! புறப்பாடு